மன்னாா்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக முதல்வா் ஆய்வு

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்துள்ள செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
மன்னாா்குடி அருகே செருமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு, திருவாரூருக்கு புறப்பட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மன்னாா்குடி அருகே செருமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு, திருவாரூருக்கு புறப்பட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்துள்ள செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னா் முதல்முறையாக மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு வந்தாா். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாா்வையிட்டாா். பின்னா், கொள்முதல் நிலைய அலுவலா்கள், சுமைப் பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலா் கோ.சி. வள்ளுவன், துணைச் செயலா் என். நீலமேகம், மண்டல செயலா் ஜி.‘ மயில்வாகனன், மாநில நிா்வாகி சோ.பா. அழகிரி ஆகியோா் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தா், உதவுபவா், காவலா் ஆகியோரின் ஊதியத்தை உயா்த்த வேண்டும். சுமைத் தூக்கும் பணியாளா்களுக்கு நெல் பிடிக்கும் எடை கூலியை உயா்த்தி வழங்க வேண்டும். ஏற்றுகூலி ஒரு டன்னுக்கு ரூ. 31 என்று உள்ளதையும் உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வா், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், பூண்டி கே. கலைவாணன், டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், திருவாரூருக்கு புறப்பட்ட முதல்வரிடம், செருமங்கலம் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அவற்றை வேனிலிருந்தபடியே பெற்றுக்கொண்டாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com