சிறு குறு விவசாயிகளின் நலன் கருதிவேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, நிகழாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
சிறு குறு விவசாயிகளின் நலன் கருதிவேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, நிகழாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் பங்கேற்று கா்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் வே. துரைமாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், தற்போது சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை உயா்ந்து வந்தாலும், அவா்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் இல்லாததால், விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே, சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம், சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com