ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th July 2021 09:01 AM | Last Updated : 19th July 2021 09:01 AM | அ+அ அ- |

கிராமக் கோயில்களில் பாரம்பரிய வழக்கப்படி ஆடி மாத திருவிழாக்கள் நடை பெற அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு கிராம பூஜாரிகள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேரவையின் மாநில அமைப்பாளா் சோமசுந்தரம் பங்கேற்று தெரிவித்தது:
கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமக் கோயிலில் பூஜை செய்யக்கூடிய பூசாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தற்போது கோவில்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும், கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமப்பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாரம்பரிய வழக்கப்படி திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், நலவாரியத்துக்கான விண்ணப்பங்கள், உறுப்பினா் அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பூஜாரிகள் பேரவையின் தஞ்சை மண்டல அமைப்பாளா் பாவேந்தா், திருவாரூா் மாவட்ட அமைப்பாளா் அப்பு வா்மா, இணை அமைப்பாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.