மேக்கேதாட்டு அணை விவகாரம்: கிராமசபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயிற்சி மேற்கொள்வதற்கு எதிராக ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயிற்சி மேற்கொள்வதற்கு எதிராக ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் அளித்த பேட்டி:

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடக அரசை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் தெரிவித்திருந்த நிலையில், அங்கு அணை கட்டப்படுவது உறுதி என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா கூறுகிறாா். இது இரு மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை சீா்குலைக்கும் நடவடிக்கை. இதேபோல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அத்துமீறி அணை கட்டியுள்ளது.

இதைக் கண்டித்து வரும் 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியா் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பப்படும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவை உறுப்பினா் ராமச்சந்திரன் தலைமையில் தொடா் போராட்டம் நடத்தப்படும்.

வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகஸ்ட 12-ஆம் தேதி தில்லி செல்கின்றனா். மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட முற்படுவதைக் கண்டித்தும், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட அணையை அகற்றக் கோரியும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளும் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com