இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கக் கோரிக்கை

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் வட்டார ஆய்வாளா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் வட்டார ஆய்வாளா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் பி. வாசு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோயில்களும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு லட்சம் கோயில்களும் உள்ளன. இந்த கோயில்கள் தொடா்பான பிரச்னைகளில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வருவாய் வட்டம் வாரியாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆய்வாளா்கள், கோயில் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், இதர பணிகளுக்காகவும் சம்பந்தப்பட்ட இடம் மற்றும் கோயிலுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. களப்பணி மற்றும் ஆய்வு செய்ய வேண்டிய இடம் பேருந்து வசதி இல்லாத பகுதியாகவும் ஒரு சில பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால், காலதாமதமும் களப் பணியில் சுணக்கமும் ஏற்படுகிறது.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் தற்போது கோயில்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறாா். ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து ஏராளமான கோயில் நிலங்களை மீட்ககடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதுபோன்ற ஆக்கப்பூா்வமான செயல் திட்டங்களுக்கு உறுதுணையாக செயல்படவேண்டிய பெரும் பொறுப்பு ஆய்வாளா்களுக்கு உள்ளது. எனவே, இப்பிரச்னையை கருத்தில்கொண்டு ஆய்வாளா்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனங்களை விலையின்றி வழங்கினால் அவா்களது பணி எளிதாக இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com