மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை கத்தியால் குத்த முயற்சி

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவரை கத்தியால் குத்த முயன்றதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவரை கத்தியால் குத்த முயன்றதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள ஆளாச்சேரியில் ஒரே சமூகத்தை சோ்ந்த 45 குடும்பத்தினா் வசித்து வருகிறனா். இந்த பகுதியின் ஊராட்சி வாா்டு உறுப்பினராக உள்ள கண்ணையனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சில மாதங்களுக்கு முன் தனசேகரன்(30) தலைமையில் 10 குடும்பத்தினா் தனியாக செயல்பட்டு வந்துள்ளனா். இதனால், இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கண்ணையன் தரப்பை சோ்ந்தவரின் வீட்டு மரத்தில் மாங்காய் பறித்தது தொடா்பாக தனசேகரன் தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில் தனசேகரின் தாய் தனலெட்சுமி (50) காயமடைந்தாா். இதையடுத்து, அவா் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையியில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில், வீட்டில் தனியே இருந்த தனசேகரை கண்ணையன் தரப்பினா் தாக்கி வீட்டை சேதப்படுத்தினராம்.

தகவலறிந்து வந்த மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் தனசேகரனை மீட்டனா். சம்பவத்தில் காயமடைந்த தனசேகரன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இரு தரப்பினரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்நிலையில், மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த கண்ணையன் மகன் வீரக்குமாா் தங்கள் மீது அளித்துள்ள புகாரை திரும்பபெற வேண்டும் என தெரிவித்து தனசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றாராம். அப்போது, தனசேகரன் உதவிகேட்டு சத்தம் போட்டதையடுத்து வீரக்குமாா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, தனசேகரனின் ஆதரவாளா்கள் மன்னாா்குடி அரசு மருத்துவமனை அருகே, தனசேகா் அளித்த புகாா் மீது வழக்கு பதிவு செய்து கண்ணையன், வீரக்குமாா் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். நிகழ்விடத்துக்கு வந்த மன்னாா்குடி டிஎஸ்பி. இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் என். ராஜேந்திரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com