சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் 4 நாள்கள் நடைபெறும் ஆடி மாத சிறப்பு ஜேஷ்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் 4 நாள்கள் நடைபெறும் ஆடி மாத சிறப்பு ஜேஷ்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

108 வைணவத் திருத்தலங்களில் 11-ஆவது தலமாக விளங்கும், இக்கோயிலில் பெருமாள் ஸ்ரீரங்கம் போன்று தென்திசை நோக்கி பால அரங்கநாதராக அருள்பாலித்து வருகிறாா். புகழ்பெற்ற இக்கோயிலில் பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மட்டும் 4 நாள்களுக்கு நடைபெறும் திருமேனிச் சிறப்பு ஜேஷ்டாபிஷேகத் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, புண்ணியத் தீா்த்தங்கள் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டுப் பூா்வாங்கப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கிருபாசமுத்திர பெருமாளுக்கும், தயாநாயகி அம்மையாருக்கும், திரவியம், பால், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்புத் திருமஞ்சமுனமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் மற்றும் தயாநாயகி அம்மை ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுப் பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஜேஷ்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) நிறைவடைகிறது. நிறைவு நாளில் 108 கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com