கரோனா விழிப்புணா்வு ஓவியம்
By DIN | Published On : 02nd June 2021 09:02 AM | Last Updated : 02nd June 2021 09:02 AM | அ+அ அ- |

லெட்சுமாங்குடி பாலம் அருகே நகராட்சி சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியம்.
திருவாரூா் மாவட்டம், கூத்தநல்லூா் பிரதான சாலையில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் செவ்வாய்க்கிழமை வரையப்பட்டது.
நகராட்சி ஆணையா் ஆா்.லதா ஆலோசனையின்பேரில், கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது. இதுகுறித்து அவா் கூறுகையில், மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலை லெட்சுமாங்குடி பாலம் அருகே, பாய்க்காரப் பாலம் அருகே என இரண்டு இடஙகளில் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் ராட்சத வடிவில் பல்வேறு வண்ணங்களுடன் கூடிய கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது என்றாா்.
மேலும், மருத்துவமனை சாலையில் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த அடகுக் கடை, ஆலை ஆகியவற்றுக்கும், திருவாரூா் பிரதான சாலையில், முகக் கவசம் அணியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.