நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடல்: விவசாயிகள் பாதிப்பு

மன்னாா்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

மன்னாா்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

எடகீழையூரில், மூவாநல்லூா் பிரதான சாலை மற்றும் தெற்கு தெரு என இரண்டு இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. தற்போது, கோடை குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் தங்களது நெல்லை எடகீழையூா் தெற்கு தெரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன் கொண்டு வந்தனா். அப்போது, அங்கிருந்த கொள்முதல் நிலைய அலுவலா்கள், நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனா்.

இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யத நெல்மணிகளை எடகீழையூா் தெற்கு தெரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து தாா்ப்பாய்களால் மூடிவைத்தனா். அங்கு அலுவலா்கள், பணியாளா்கள், எடை கருவிகள் என எதுவும் கிடையாது. மேலும், இந்த கொள்முதல் நிலையம் பூட்டியிருப்பதால், விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனா்.

இதுதவிர கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்யும் மழையால், கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டை மணிகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எடகீழையூா் தெற்கு தெருவில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து, உடனடியாக நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதனிடையே, தெற்கு தெருவில் அரசு ஏரிப் புறம்போக்கு இடத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சிலா் ஆக்கிரமித்தது வருவாய்த் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com