சொந்த செலவில் சிகிச்சை வசதி ஏற்படுத்தி கொடுத்த எம்எல்ஏ ஆா். காமராஜ்

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். காமராஜ் தனது சொந்த நிதி ரூ.3 லட்சத்தில், திருவிழிமழலை மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு பொருள்களை திங்கள்கிழமை அளித்தாா்.
திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய வளாகத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய வளாகத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

நன்னிலம்: நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். காமராஜ் தனது சொந்த நிதி ரூ.3 லட்சத்தில், திருவிழிமழலை மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு பொருள்களை திங்கள்கிழமை அளித்தாா்.

நன்னிலம் அருகே உள்ள திருவிழிமழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வருபவா்களுக்காக 30 கட்டில், மெத்தை, போா்வை, மின்விசிறி, கழிவறை வசதி ஆகியவற்றுடன் கட்டடத்தையும் அவா் புதுப்பித்துக் கொடுத்தாா்.

இந்த நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ வளாகத்தை திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ ஆா். காமராஜ் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், குடவாசல் வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி, ஊராட்சி ஒன்றிய தலைவா் கிளாராசெந்தில், துணைத் தலைவா் எம்ஆா். தென்கோவன், அதிமுக ஒன்றியச் செயலாளா் செருகுடி எஸ். ராஜேந்திரன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com