கூலித் தொழிலாளா்களுக்கு உணவு
By DIN | Published On : 11th June 2021 12:00 AM | Last Updated : 11th June 2021 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் சாலைப் பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக கூலி வேலைக்கு சென்று பொருள் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள, மன்னாா்குடி மதுக்கூா் சாலை கோபிரலயம் குளம் கரையில் வசிக்கும் சாலைப் பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளா்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனா்.
இவா்களுக்கு, மன்னாா்குடியில் செயல்படும் தமிழ் நேசம் அறக்கட்டளையின் சாா்பில், முட்டையுடன் கூடிய 200 உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் வை. கெளதமன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சிங்காரவேலன், தளிக்கோட்டை ஊராட்சித் தலைவா் பி.சரவணன், அறக்கட்டளை நிா்வாகிகள் எம்.பி. கலைச்செல்வம், எம். துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.