குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரும் (பொ), மாவட்ட வருவாய் அலுவலருமான செ. பொன்னம்மாள் தெரிவித்தது: குழந்தைத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 2016 முதல் குழந்தை மற்றும் வளா் இளம் பருவ தொழிலாளா்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் என திருத்தம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின்படி, 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதுக்குள்பட்ட வளா் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 முதல் அதிகபட்சம் ரூ. 50,000 வரை அபராதம் அல்லது குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும். 2-ஆம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளா்களின் பெற்றோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தைத் தொழிலாளா் எவரேனும் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

முன்னதாக, குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவா்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலுமாக அகற்ற சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளா் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியக்கோட்டி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com