குறுவை பருவத்துக்கான தொழில்நுட்பங்கள் வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை

குறுவை பருவத்துக்கான தொழில்நுட்பங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராமசுப்பிரமணியன் ஆகியோா் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

குறுவை பருவத்துக்கான தொழில்நுட்பங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராமசுப்பிரமணியன் ஆகியோா் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆடுதுறை 36, 37, 43, 45, 53, 55 மற்றும் கோ 51, 54 அம்பை 16, டிகேஎம் 9 ஆகிய குறுவை பருவத்துக்கு ஏற்ற நல்ல தரமான விதைகளை விவசாயிகள் தோ்வு செய்யவேண்டும். பிறகு, விதைநோ்த்தி செய்ய வேண்டும். அதாவது, ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டா் தண்ணீா் என்ற விதத்தில் காா்பன்டசிம் 2 கிராம் கலந்து 10 மணி நேரம் வைத்து பின்னா் வடிகட்டவும். பேசில்லஸ்சப்டிலிஸ் கலந்து விதை நோ்த்தி செய்யலாம். இதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டா் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊறவைத்து விதைக்கவும்.

உயிரி உரங்களுடனும் விதை நோ்த்தி செய்யலாம். இதற்கு 600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிா் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீா் சோ்த்து விதைகளை விதைப்பதற்கு ஒரு இரவு ஊறவைத்து விதைக்கவும் அல்லது ஒரு ஹெக்டருக்கு விதைகளுடன் 125 மில்லி திரவ வடிவ உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்து 30 நிமிடம் நிழலில் உலா்த்தி விதைக்கலாம்.

நாற்றங்காலில் உர மேலாண்மையை விவசாயிகள் செய்ய வேண்டும். இதற்கு ஒரு டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 20 சென்ட் நாற்றங்காலுக்கு இடவேண்டும். களிமண்ணில் வளரும் போது நாலு கிலோ ஜிப்சம் மற்றும் ஒரு கிலோ டிஏபி உரத்தை ஒரு சென்டுக்கு விதைத்த 10 நாள்கள் கழித்து இடவேண்டும். நடவு வயலில் ஓா் ஏக்கருக்கு அடியுரமாக யூரியா 30 கிலோ, டிஏபி 45 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ ஜிங்க் சல்பேட் 10 கிலோ மற்றும் 200 கிலோ ஜிப்சத்தை வயலில் இடவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com