திருத்துறைப்பூண்டி: குறுவை சாகுபடி இருமடங்கு அதிகரிக்கும்; வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை சாகுபடி பரப்பு இரு மடங்காக அதிகரிக்கும் என வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை சாகுபடி பரப்பு இரு மடங்காக அதிகரிக்கும் என வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி பணியை தொடங்கியுள்ளனா். இதனால், நிகழாண்டு திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை சாகுபடி 3000 ஹெக்டேருக்கும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமும், தனியாா் விற்பனை மையங்கள் மூலமும் கோ 51, ஆடுதுறை 45, டிகேஎம் 9, ஏடிடி16, எடிடி 36, முதலிய ரகங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிகேஎம் 9 ரகம் அதிகமாக நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிக விளைச்சல் கிடைப்பதாலும், தனியாா் வியாபாரிகள் விரும்பி வாங்குவதாலும் இந்த நெல் ரகத்தை விவசாயிகள் அதிக அளவில் நேரடி விதைப்பு செய்துள்ளனா். எனினும் டிகேஎம் 9 ரகம் எளிதில் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதால், முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு, முக்கியமாக நேரடி விதைப்பில் 8 அடி இடைவெளியில் பட்டம் பிரித்து விட வேண்டும். நேரடி விதைப்பில் பயிா் எண்ணிக்கையை பராமரிப்பது கடினமாகும். எனவே பயிா் நெருக்கமாக முளைத்து காற்றோட்டமின்றி, புழுக்கம் ஏற்பட்டு புகையான் நோய்க்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். எனவே, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் 8 அடி பட்டம் பிரித்து விடுவது மிகவும் அவசியமாகும். கடந்த ஆண்டு 1830 ஹெக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com