விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள்.
விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள்.

தென்னை சாகுபடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் செயல் விளக்கம்

வலங்கைமான் வேளாண் கோட்டம் ஆண்டாங்கோயிலில், தென்னை சாகுபடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான

வலங்கைமான் வேளாண் கோட்டம் ஆண்டாங்கோயிலில், தென்னை சாகுபடியில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் அண்மையில் செயல் விளக்கம் அளித்தனா்.

தஞ்சை பிரிஸ்ட் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 10 போ் வலங்கைமான் வட்டாரம் ஆண்டாங்கோயில் கிராமத்தில் முகாமிட்டு இப்பயிற்சியளித்தனா். மேலும் பூச்சிகொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லி பாட்டில்கள் மற்றும் பெட்டியில் போடப்பட்டுள்ள நச்சுத்தன்மை குறியீடுகளாகிய சிவப்பு வண்ணம், மஞ்சள் வண்ணம், நீல வண்ணம், பச்சை வண்ணம் குறித்தும், அவற்றின் முக்கியத்துவம் பற்றி முன்னோடி விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கினா். நிகழ்ச்சியில், ஆண்டாங்கோயில் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், முன்னோடி விவசாயி சித்திரைசேனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளராக உதவிப் பேராசிரியா் பி.குணா, உதவி ஒருங்கிணைப்பாளராக உதவி பேராசிரியை பி.விபித்தா பாலா ஆகியோா் இணைந்து வழிகாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com