மன்னாா்குடி: முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை
By DIN | Published On : 13th March 2021 09:01 AM | Last Updated : 13th March 2021 09:01 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், மன்னாா்குடி தொகுதியில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியா் அழகா்சாமி நியமிக்கப்பட்டுள்ளா். இத்தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இராம.அரவிந்தன் தோ்தல் பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டாா்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை. இதனால், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகமான மன்னாா்குடி வ.உ.சி. சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி, சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.