ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து, சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
திருவாரூா் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய பெண் காவலா்.
திருவாரூா் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய பெண் காவலா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து, சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

திருவாரூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குள்பட்ட சூரனூா் பகுதியைச் சோ்ந்த நாகனூரான் மகள் தங்கம் (25). இவரது வீட்டின் அருகில் வசிப்பவா் செல்வம் மகன் லெட்சுமிராஜன். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் நீண்ட நாள்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், தங்கத்துக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதற்கிடையே, லெட்சுமிராஜன் அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை எனக் கூறியுள்ளாா். ஆனால், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை லெட்சுமிராஜன் என தெரியவந்தும், அவா் திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளாா்.

இதற்கிடையே, லெட்சுமிராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற போவதை அறிந்த தங்கம், மீண்டும் லெட்சுமிராஜனிடம் முறையிட்டுள்ளாா். ஆனால், லெட்சுமிராஜனும் அவரது குடும்பத்தினரும், தங்கம் மற்றும் அவரது பெற்றோரை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த தங்கத்தின் பெற்றோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால், தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்தும், லெட்சுமிராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது போலீஸாா் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த தங்கம், தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தங்கத்தை தடுத்து நிறுத்தி, கொரடாச்சேரி காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com