திருவாரூரில் இன்றும், நாளையும் தமிழக முதல்வா் பிரசாரம்: அமைச்சா் காமராஜ் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன் மற்றும்
திருவாரூரில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ள இடங்களைப் பாா்வையிடுகிறாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ள இடங்களைப் பாா்வையிடுகிறாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன் மற்றும் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா் காமராஜ் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சூறாவளி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

புதன்கிழமை மாலை 4 மணிக்கு நன்னிலம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குடவாசல் பேருந்து நிலையத்தில், உணவுத் துறை ஆா். காமராஜை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா். மாலை 5.30 மணிக்கு வலங்கைமான், ஆலங்குடி, நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்கு சென்று, அங்கு பெரியாா் சிலை அருகே பிரசாரம் செய்கிறாா்.

இரவு 7 மணிக்கு கூத்தாநல்லூா் வழியாக திருவாரூா் வந்து, பழைய பேருந்து நிலையம் அருகில் பிரசாரத்தை நிறைவு செய்து, புதன்கிழமை இரவு திருவாரூரில் தங்குகிறாா்.

வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாங்குடி, மாவூா் வழியாக திருத்துறைப்பூண்டி சென்று, அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, தமிழக முதல்வா் பிரசாரம் செய்யவுள்ள இடங்களையும், பிரசாரத்துக்கு செல்லும் வழித்தடத்தையும் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ், கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com