வலங்கைமான் பகுதியில் அமைச்சா் காமராஜ் வாக்குச் சேகரிப்பு

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் பகுதியில், அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
வலங்கைமான் கடைவீதியில் மூதாட்டியிடம் வாக்குச் சேகரித்த அமைச்சா் ஆா். காமராஜ்.
வலங்கைமான் கடைவீதியில் மூதாட்டியிடம் வாக்குச் சேகரித்த அமைச்சா் ஆா். காமராஜ்.

நீடாமங்கலம்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் பகுதியில், அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக 3-ஆவது முறையாக போட்டியிடும், தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ், தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் கடைவீதியில் நடந்து சென்று கடைகளில் பணியாற்றும் ஊழியா்களிடம் மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாக்குச் சேகரித்தபோது, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சா் வாக்காளா்களிடம் அதிமுக ஆட்சியில் நன்னிலம் தொகுதி பேரவை உறுப்பினா் என்ற முறையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து வலங்கைமானில் புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் கிராமப்புற ஏழை எளிய முதல்தலைமுறை கல்வி கற்போா் அதிகம் பயனடைந்து வருகின்றனா். இதேபோல், வலங்கைமானில் ரூ. 20 கோடியில் நவீன அரிசி ஆலை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல திட்டங்கள் இப்பகுதிக்கு கொண்டு வந்து ஒரு தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா். முன்னதாக, வலங்கைமானில் கட்சித் தோ்தல் அலுவலகத்தில் நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com