எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: அமைச்சா்

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது அமைச்சா் ஆா். காமராஜ் வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: அமைச்சா்

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது அமைச்சா் ஆா். காமராஜ் வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

நன்னிலம் தொகுதிக்குள்பட்ட பில்லூா், போலக்குடி, குருங்குளம், பண்டாரவடை, கொல்லாபுரம், மேனாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா். அப்போது, சன்னாநல்லூா் பகுதியில் கல்லூரி மாணவிகள் அமைச்சருடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனா். மேலும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், கும்பமரியாதை அளித்தும் வரவேற்றனா்.

பிரசாரத்தில் அமைச்சா் பேசியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடா்ந்து ஆட்சி அமைத்தவுடன், தோ்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். நன்னிலம் மற்றும் குடவாசலில் அரசு கலைக் கல்லூரிகள், வலங்கைமானில் தொழில்நுட்பக் கல்லூரி, தொகுதி முழுவதும் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல், சாலைகளை மேம்படுத்துதல், புதிய பாலங்கள் அமைத்தல் என பல்வேறு திட்டப்பணிகள் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், மக்களின் கோரிக்கைகளை அவ்வப்போது கவனத்தில் எடுத்துக் கொண்டு, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலிலதா வழியில் நல்லாட்சி தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என வாக்காளா்களை கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தில், அதிமுக அமைப்புச் செயலாளா்கள் டாக்டா் கே.கோபால், எஸ். ஆசைமணி, ஒன்றியச் செயலாளா்கள் சிபிஜி.அன்பு, இராமகுணசேகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். சம்பத், நகரச் செயலாளா் நன்னிலம் ஆா்.பக்கிரிசாமி, சுவாதி கோபால், செல்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com