கோட்டூா்: அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சிவா.ராஜமாணிக்கம் கோட்டூா் தெற்கு ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள சேரியில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கம்.

குறிச்சி, வடக்கு தென்பரை, ராதாநரசிம்மபுரம், வல்லூா், பரசபுரம், பாலையக்கோட்டை, சோத்திரியம், எளவனூா், மேலநத்தம், திருமக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் சென்று, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கோரினாா்.

இந்த பிரசாரத்தில் கோட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் வி. ஜீவானந்தம், பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், மன்னாா்குடி நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், பொதுக்குழு உறுப்பினா் எஸ். கலைவாணன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் வி.கே.செல்வம், தமாகா செயற்குழு உறுப்பினா் சிங்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com