விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்: கனிமொழி

விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்: கனிமொழி

விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு ஆதரவு கோரி, வாளவாய்க்கால் பகுதியில் அவா் சனிக்கிழமை பேசியது:

மக்களுக்கு எதிரான ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் மத்திய அரசு அடகு வைத்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி செய்ததுபோல விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். கல்விக்கடனும் ரத்து செய்யப்படும். நீா்நிலைகள் முழுமையாக தூா்வாரப்படும். தமிழக விவசாயிகளுக்காக கருணாநிதி ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தது போல தலைவா் ஸ்டாலினும் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளாா். முதியோா் உதவித்தொகை ரூ. 1500 ஆக உயா்த்தி வழங்கப்படும்.

கரோனா தொகையாக, கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி ரூ. 4000 வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கப்படுவதோடு கரும்பு நிலுவை தொகை பெற்றுத்தரப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் உயா்த்தி வழங்கப்படும். சிறுதானியப் பயிா்களுக்கும் ஆதார விலை நிா்ணயம் செய்யப்படும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீா்நிலைகள் முறையாக தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூரில் இசைக்கல்லூரி தொடங்கப்படும். உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பிரமாண்ட உரக்கிடங்கு ஏற்படுத்துவதோடு, பாமணி உரத்தொழிற்சாலையை மேம்படுத்தி, இயற்கை உரங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரடாச்சேரி அருகே சோழசூடாமணி ஆற்றில் மேம்பாலம் அமைக்கப்படும்.

திருவாரூா் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் முறைப்படுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்துவை ஆதரித்து திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே கனிமொழி எம்.பி. பேசியது:

தமிழகத்துக்குள் பாஜக-வை அனுமதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். மத்தியில் ஆளும் பாஜகவின் பினாமி ஆட்சியாக தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசு தவறு செய்தால் அதை தட்டிக் கேட்கும் முதல் குரல் ஸ்டாலினின் குரலாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து, நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் திருத்துறைப்பூண்டியில் கால்நடை ஆராய்ச்சி மையம், புறவழிச்சாலை அமைக்கப்படும். கொருக்கை கால்நடை பண்ணை கால்நடை கல்லூரியாக மாற்றப்படும். முத்துப்பேட்டையில் குளிா் பதனக்கிடங்கு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com