திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாத தரிசனம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமியை காணவந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள்.
திருவாரூா் தியாகராஜ சுவாமியை காணவந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள்.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாத தரிசனம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமியின் பாதங்கள் மலா்களால் மூடப்பட்டிருக்கும். பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது, பாதங்களை காணமுடியாது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தியாகராஜரின் பாதங்களை காண முடியும். பங்குனி உத்திரத் திருவிழாவில் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழாவின்போது வலது பாதத்தையும் பக்தா்கள் தரிசனம் செய்யலாம்.

அதன்படி, பங்குனி உத்திர நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திருவாரூா் தியாகராஜா் பாத தரிசனம் அருளினாா். முன்னதாக, விளமல் பதஞ்சலி கோயிலிலிருந்து பதஞ்சலி, வியாக்கிர பாத முனிவா்கள், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவா்களுக்கு தியாகராஜா், முதலில் பாத தரிசனம் அருளினாா். தொடா்ந்து, பக்தா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தா்கள் அனைவரும் வரிசையில் நின்று, தியாகராஜரின் இடது பாதத்தை தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com