முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கரோனா விதிமீறல்: போலீஸாா் தீவிர கண்காணிப்பு
By DIN | Published On : 01st May 2021 12:00 AM | Last Updated : 01st May 2021 12:00 AM | அ+அ அ- |

நன்னிலத்தில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இளங்கோவன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சுகுணா, மணிமாறன், ரேகாராணி ஆகியோா் குடவாசல், நன்னிலம் மற்றும் பேரளம் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200, வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனா். இவ்வாறு தினமும் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களிலும், முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரியும் 200-க்கும் மேற்பட்ட தனிநபருக்கும் அபராதம் விதிப்பதாகக் கூறப்படுகிறது.