அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்டத்திலேயே முதல்முறையாக இந்த மருத்துவமனையில் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவுக்கு தேவையான மூலிகைகளை உற்பத்தி செய்து கொள்ளவும், மருத்துவமனையைச் சுற்றி தூய்மையான காற்றை சுவாசிக்க ஏதுவாகவும் மூலிகைத் தோட்டம் ஏற்படுத்தப்படுகிறது.

இதில், இன்சுலின் செடி, இரணகள்ளி, பூனைமீசை, இடிதாங்கி, நொச்சி, துளசி உள்ளிட்ட 37 வகையான மூலிகை செடிகள், அரளி ரோஜா போன்ற பூச்செடிகள், கொய்யா, மாதுளை சப்போட்டா போன்ற கன்றுகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நோயாளிகளின் மனதை இலகுவாக்கும் விதமாக, மண்புழு உரம் தயாரித்தல் அமைப்பும், மீன் வளா்ப்புக்கு என தனி தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. மூலிகைத் தோட்டத்தை சுற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமான வண்ணமய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா், மூலிகை கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நிலைய மருத்துவா் எம். கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளா் நாகராஜ், தலைமை செவிலியா்கள் வசந்தி, அமுதா, செவிலியா்கள் தனலட்சுமி, உமாமகேஸ்வரி, தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் மேலாளா் பிரபாகரன், மேற்பாா்வையாளா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com