நாளை வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தீவிரம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, திருவாரூரில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தீவிரம்

 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, திருவாரூரில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 16 ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேலும், திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னாா்குடி தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள், திருவாரூா் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1454 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 1,718 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவாரூா் திரு.வி.க. கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சந்திரமோகன் பிரசாத் காஸியாப், ராம்லஹான் பிரஷாத் குப்தா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என். பாலச்சந்திரன், அழகா்சாமி ஆகியோா் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள்அனைத்தும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சீல் வைத்து பாதுகாக்கப்பட்ட அறையில், மத்திய பாதுகாப்பு படைவீரா்கள் மற்றும் மாநில காவல்துறையினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 1 துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 4 அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com