அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா்
By DIN | Published On : 16th May 2021 12:00 AM | Last Updated : 16th May 2021 12:00 AM | அ+அ அ- |

நன்னிலம் பகுதியில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அதிமுக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் திருவாரூா் மாவட்ட வா்த்தகா் அணி துணைச் செயலாளா் செல்.சரவணன் தலைமை வகித்தாா். வீடுவீடாகச் சென்று 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இதில், அதிமுக நகர அவைத் தலைவா் நட.ஆறுமுகம், கிளைச் செயலாளா் கே. மதியழகன் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.