பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 18th May 2021 01:07 AM | Last Updated : 18th May 2021 01:07 AM | அ+அ அ- |

நன்னிலம்: பாமக சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினருமான ஆா்.கே. ஐயப்பன் தலைமையில், நன்னிலம் அருகேயுள்ள தென்குடி செருவலூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனி உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இப்பணியில், கட்சியின் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலாளா் கே.பி. மாரிமுத்து, நன்னிலம் ஒன்றிய இளைஞரணி செயலாளா் பிரகாஷ், ஒன்றிய வன்னியா் சங்கச் செயலாளா் உதயகுமாா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.