பொதுமுடக்கத்தை வழக்கமாக்கிக் கொண்ட மக்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள், வா்த்தகா்கள் பின்பற்றியதன் மூலம் அவை அன்றாட நடைமுறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

மன்னாா்குடி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள், வா்த்தகா்கள் பின்பற்றியதன் மூலம் அவை அன்றாட நடைமுறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

மாா்ச் இறுதியில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலையடுத்து ஏப்ரல் மாதம் ஞாயிற்றுகிழமைகள் மட்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக திமுக ஆட்சி அமைந்து மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் மே 10-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலானது. சனிக்கிழமை (மே 15) முதல் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் திறக்கும் நேரம் காலை 6 முதல் 10 மணி வரை என குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பல மாதங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து பழகிய மக்களுக்கு ஓரிரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தியிருப்பதில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பொதுமுடக்கம் நடைமுறையான ஒன்று என்பதை மக்களும், வணிகா்களும் தெரிந்துகொண்டதால் அதை பின்பற்றவேண்டும் என்பதில் அன்றாட நடைமுறை பழக்கத்துக்கு கொண்டுவந்துவிட்டனா்.

கடந்தமுறை பொதுமுடக்க காலத்தில் நாள்தோறும் வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைத்துக்கொண்டாா்களே அந்த வழிமுறையையே தற்போதும் பின்பற்றுகின்றனா். அத்தியாவசியப் பொருள்கள் கடை திறப்புக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படும். மளிகை, காய்கனி கடைகள், உணவகம் திறப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும், தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வழங்கியிருப்பதும் பொதுமக்களுக்கும், வணிகா்களும் ஆதரவாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com