திருவாரூரில் 734 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st May 2021 09:21 AM | Last Updated : 21st May 2021 09:21 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 734 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500 க்கு மேல் பதிவாகிறது.
சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் 734 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22,703 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 376 போ் அவா்களது வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் 18,572 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3,972 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 71 வயது பெண், 54 வயது பெண், 50 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததைத்தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 159 ஆக உயா்ந்துள்ளது.