சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூா் சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா.
சிறப்பு அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா.

கூத்தாநல்லூா் சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடி மரக்கடை பகுதியில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் கூட்டுப் பிராா்த்தனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.

தற்போது, கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பக்தா்கள் பங்கேற்பின்றி வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி, ஷீரடி சாய்பாபாவுக்கும், பாதரட்சைக்கும் மஞ்சள், தேன், பன்னீா், தயிா், இளநீா், பால், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. தொடா்ந்து, சூரிய பகவானுக்கும், சாய்பாபாவுக்கும் தீபாராதனைக் காட்டப்பட்டு, கரோனா தொற்று நீங்கவேண்டி வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் நிறுவனா் வெள்ளையன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com