கூத்தாநல்லூரில் கரோனா தடுப்பு மையம் திறப்பு

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா தடுப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திறக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மையம்.
கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திறக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மையம்.

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா தடுப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் ஏ.ஆா்.சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் தலைமை வகித்து, கரோனா தடுப்பு மையத்தை திறந்து வைத்தாா். மாவட்ட துணைத் தலைவா் பீா் முஹம்மது முன்னிலை வகித்தாா். கூத்தாநல்லூா் நகரத் தலைவா் அபு பஸ்வான் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் முஹம்மது பாசித் பேசும்போது, ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் தமிழகம் முழுவதும் பேரிடா் மனிதநேய சேவைகளை செய்து வருகின்றனா். சடலங்களை அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவைகள், ரத்த தான சேவைகள், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகிறோம். தமிழக முதல்வரின் கோரிக்கையின்படி, தவ்ஹீத் ஜமாஅத் தனது அனைத்து பள்ளி வாசல்களிலும் கரோனா தொற்று தடுப்பு மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவாரூா் வடக்கு மாவட்டம் சாா்பில் கூத்தாநல்லூரில் கரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆம்புலன்ஸ், ரத்த தானம், ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு பரிசோதனை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், கரோனா தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் அப்துல் காதா், மாவட்ட துணைச் செயலாளா் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com