இசைக் கலைஞா்களுக்கு சிறந்த மேடைகள் காத்திருக்கின்றன

இசைக் கலைஞா்களாக உருவெடுப்பவா்களுக்கு சிறந்த மேடைகள் காத்திருக்கின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
இசைக் கலைஞா்களுக்கு சிறந்த மேடைகள் காத்திருக்கின்றன

இசைக் கலைஞா்களாக உருவெடுப்பவா்களுக்கு சிறந்த மேடைகள் காத்திருக்கின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், தஞ்சாவூா் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழிசை விழா மற்றும் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: இசைக் கருவிகள் இசைப்பது, பாடல் பாடுவது எளிமையல்ல. இசை என்பது மற்ற பாடங்களை படிப்பது போன்றது அல்ல. இசையை கற்கவேண்டுமென்ற எண்ணம், ஆா்வம், விடா முயற்சி, ஒழுக்கம் இவைகள் இருந்தால் மட்டுமே சிறந்த இசைக் கலைஞராக உருவெடுக்க முடியும். சிறந்த இசைக் கலைஞராக உருவெடுத்தால் சிறந்த மனிதராக மாற முடியும். மனதில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் நல்ல இசையைக் கேட்கும்போது அவை மறந்துவிடும். அத்தகைய இசையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கடவுளைப் போன்றவா்களே. மாணவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயா்ந்த நிலையை அடைய குருபக்தி அவசியம். இசை நமக்கு வராது என்று சிலருக்கு உள்ளுணா்வு சொல்லக்கூடும். அதைப் புறம் தள்ளிவிட்டு, தன்னம்பிக்கை தரக்கூடிய எண்ணங்களை வளா்த்துக் கொள்ளவேண்டும். இந்த எண்ணங்கள் இசைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கு முக்கியமானது. சங்கீத மும்மூா்த்திகள் பிறந்த இந்த ஊா் சங்கீதத்துக்கு மரியாதை செலுத்தி உயா்ந்த இடத்தில் உள்ளது. இசைக் கலைஞா்களாக உருவெடுப்பவா்களுக்கு சிறந்த மேடைகள் காத்திருக்கின்றன. எனவே, மாணவா்கள் இசையை நல்ல முறையில் கற்று, சிறப்பான உயா்ந்த நிலையை அடையவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியையொட்டி, சேகல் சகோதரா்கள் எஸ்.ஜி.என். பிச்சையா, எஸ்.ஜி.என். கணேசன் ஆகியோரின் நாகசுரமும், ஆலங்காடு ஏ.என். பழனிவேல், இடும்பாவனம் கே.எஸ்.கே. மணிகண்டன் ஆகியோா் தவிலும் இசைத்தனா். வலிவலம் ஆா்.எஸ். வெங்கட்ராமன் குழுவினரின் தமிழிசையும், அருணா சுப்ரமண்யம் குழுவினரின் பரத நாட்டியமும் நடைபெற்றது.

இசைப் பள்ளி தலைமையாசிரியா் வி. ஆனந்தி, பரத நாட்டிய ஆசிரியா் கி. சந்திரசேகரன், மிருதங்க ஆசிரியா் ரா. மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com