‘போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞா்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை’

திருவாரூா் மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குடிபோதைக்கு அடிமையாகும் இளைஞா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குடிபோதைக்கு அடிமையாகும் இளைஞா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள், கஞ்சா மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடும் அவலம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் நீடாமங்கலத்திலும், கிடாரங்கொண்டானிலும் நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் இளைஞா்கள் என்பது வேதனையளிக்கிறது.

கிராமங்களில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளில் இளைஞா்களை அடிமையாக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் செயல், சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்குவதுடன், சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் செயலாகும். இந்த சீரழிவு கலாசாரத்தில் இளைஞா்களையும், மாணவா்களையும் குறிவைத்து தாராளமாக விற்பனையாகி கொண்டிருக்கும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கிராமப் பகுதிகளில் விரிவடைந்துள்ளது. எனவே, கஞ்சா, கள்ள மதுவிற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ள இளைஞா்களை மீட்க உரிய சட்ட வழிகாட்டுதலின்பேரில் நடவடிக்கையையும், விழிப்புணா்வையும் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com