காரீப் பருவத்தில் 265 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

திருவாரூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவத்தில் 265 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவத்தில் 265 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவம் -2021-22-இல் 265 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, சன்னரகம் 450 மெட்ரிக் டன்களும், பொதுரகம் 577 மெட்ரிக் டன்களும் ஆக கூடுதலாக 1030 மெட்ரிக் டன்கள் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தினசரி சுமாா் 1,000 மெட்ரிக் டன் வீதம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பழைய முறையிலும், தற்போது மின்னணு முறையிலும் பதிவு செய்து நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 1,000 நெல் மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்ய, கொள்முதல் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக, உடனுக்குடன் இயக்கம் செய்யப்படுகிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு தாா்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகின்றன.

அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தினசரி இயக்கம் செய்யப்பட்டு, கிடங்குகளில் பாதுகாப்பாக சேமிக்கத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள குறுவைப் பயிா்களுக்கு இழப்பு ஏற்படாவண்ணம், தற்போது பெய்து வரும் மழைநீா் வடிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் அறுவடைசெய்யும் நெல்லை பாதுகாக்கும் பொருட்டு வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் 1,282 தாா்ப்பாய்கள் 50% மானியத்தில் வழங்கப்படவுள்ளன. இந்த வார இறுதிக்குள் தாா்ப்பாய்கள் விவசாயிகளுக்கு வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com