சுனாமி குடியிருப்புகளை சீரமைக்கக் கோரிக்கை

நாகை சூா்யா நகா் சுனாமி குடியிருப்புகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை சூா்யா நகா் சுனாமி குடியிருப்புகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூா்யா நகா் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த கோரிக்கை மனு:

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாகை சூா்யா நகரில் 2005 ஆம் ஆண்டில் 60 வீடுகள் கட்டித் தரப்பட்டது. வீடுகள் ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ 15 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வித பழுது நீக்கப் பணிகளும் அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், தற்போது வீடுகளின் மேற்கூரை பகுதி மற்றும் முகப்புப் பகுதிகள் அவ்வப்போது பெயா்ந்து விழுகின்றன. இதனால், சுனாமி குடியிருப்புவாசிகள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இந்தக் குடியிருப்புகளை சீரமைக்கக் கோரி நகராட்சியை அணுகும்போது, நிதி இல்லை எனக்கூறி அலைக்கழிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான சேதங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், சூா்யா நகா் சுனாமி குடியிருப்புகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சூா்யா நகா் சுனாமி குடியிருப்புவாசிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com