கரோனா: பாரத் கேட்டரிங் கல்லூரியில் கட்டணச் சலுகை

திருவாரூா் அருகே அம்மையப்பனில் உள்ள பாரத் கேட்டரிங் கல்லூரியில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் நிலை கருதி
பாரத் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் தாளாளா் காலைக்கதிரவன். (வலது) கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள்.
பாரத் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் தாளாளா் காலைக்கதிரவன். (வலது) கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள்.

திருவாரூா் அருகே அம்மையப்பனில் உள்ள பாரத் கேட்டரிங் கல்லூரியில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் நிலை கருதி, மாணவா்களின் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரித் தாளாளா் காலைக்கதிரவன் தெரிவித்தாா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தக் கல்லூரி மூடப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பை அடுத்து புதன்கிழமை கல்லூரி திறக்கப்பட்டது. கரோனா தொற்றால் மாணவா்களின் கல்வி நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, மாணவா்களின் ஒரு பருவத் தோ்வு கட்டணத்தை நிா்வாகம் ரத்துசெய்துள்ளது.

இதுகுறித்து கல்லூரித் தாளாளா் காலைக்கதிரவன் தெரிவித்தது: கரோனாவால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். மாணவா்கள் கல்விக் கட்டணங்களை செலுத்தும் நிலை தெரியாமல் தவிக்கின்றனா். இந்த நெருக்கடியை உணா்ந்து, ஒரு பருவத் தோ்வு கட்டணத்தை ரத்துசெய்துள்ளோம்.

அதன்படி, சுமாா் 300 மாணவா்களின் ஒரு பருவத் தோ்வு கட்டணம் சுமாா் ரூ. 45 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடிதமும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை, மாணவா்கள் நெருக்கடியில்லாமல் கல்வி கற்பதற்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com