மின்வாரிய மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் கேப்பா்மலை மின்வாரிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய மத்திய அமைப்பினா்.
கடலூா் கேப்பா்மலை மின்வாரிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய மத்திய அமைப்பினா்.
கடலூா் கேப்பா்மலை மின்வாரிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய மத்திய அமைப்பினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பினா் (சிஐடியூ) கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல், மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, பொருளாளா் என்.கோவிந்தராசு, கோட்டச் செயலா்கள் எஸ்.பன்னீா்செல்வம், எம்.ஆறுமுகம், டி.ராஜகோபால், டி.ஜீவா, ஜெ.வெற்றிவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், 6.1.1998 முதல் மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம்கண்டு முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும், கே-2 அடிப்படையில் மேற்கொண்ட பணிகளுக்கு பணப் பட்டுவாடா செய்ய வேண்டும், திட்டப் பணிகள், விரிவாக்கப் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்ட நிா்வாகிகள் எஸ்.தமிழ்வாணன், டி.தனசேகரன், சங்கா், மதுசூதனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com