அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா் தின விழா
By DIN | Published On : 07th September 2021 12:00 AM | Last Updated : 07th September 2021 12:00 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆசிரியா்களும், மாணவா்களும் சா்வபள்ளி டாக்டா் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா்எம்.சீனிவாசன், பதிவாளா் ஆா்.ஞானதேவன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வி.செல்வநாராயணன் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் (படம்). மேலும் பல்வேறு புலங்களிலும், துறைகளிலும் ஆசிரியா் தின விழா நடைபெற்றது.