திருவாரூா் மாவட்டத்தில் 7 மாணவா்களுக்கு கரோனா

 திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

 திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில், செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவா்களுக்கு அவ்வபோது கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவப் பரிசோதனைக் குழுவினரும் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களை பரிசோதித்து வருகின்றனா். மாணவா்களிடம் கடந்த வாரத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் 4 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியில் 2 போ், தலைக்காடு பகுதியில் ஒருவா் என 3 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது. பள்ளிகள் திறப்புக்கு முன்பு எடமேலையூரில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற 7 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com