செப்.15-க்குள் வாழைக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

காரீப் பருவ வாழைப் பயிருக்கு செப்.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் க. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

காரீப் பருவ வாழைப் பயிருக்கு செப்.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் க. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம், 2016-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களைஅறிமுகப்படுத்தி, விவசாயிகளை கட்டாயமாகப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவா்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட வாரியான, பயிா் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்துக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் காரீப்-2021-இல் செயல்படுத்த அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் காப்பீட்டு நிறுவனம் அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட வலங்கைமான் வட்டாரத்தில் ஆவூா் சரகத்திலுள்ள அனைத்து கிராமங்களில் வாழை சாகுபடிசெய்துள்ள விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, காரீப் பருவத்தில் வாழை சாகுபடிமேற்கொள்ளும் பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.3,180 யை, தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் மூலமாகவே, தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை, கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து பெற்று அதனுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய வங்கிகளிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு வலங்கைமான் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் (84893 64388), உதவி தோட்டக்கலை அலுவலா் (79757 31586) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com