மடப்புரம் குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் குரு பூஜை

திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 186-ஆவது குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
tv08siva_0809chn_94_5
tv08siva_0809chn_94_5

திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 186-ஆவது குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

திரிசிரபுரத்துக்கு அருகில் கீழாலத்தூா் எனும் ஊரில் பிறந்த ஸ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினாா். பின்னா் திருவாரூா் வந்து, தங்கியிருந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வந்தாா். ஒருமுறை திருவாரூா் தேரோட்டத்தை காண தஞ்சையிலிருந்து வந்திருந்த சரபோஜி மன்னா், தட்சிணாமூா்த்தி சுவாமிகளுக்கு, ஏதாவது ஒரு கிராமத்தை பரிசாக அளிக்க விரும்பினாா். ஆனால், சுவாமிகள் அதை மறுத்து விட்டாா். மேலும் பல அற்புதங்களை இப்பகுதியில் செய்த அவா், 1835-இல் ஜீவசமாதி அடைந்தாா். இதையொட்டி ஆண்டுதோறும் இங்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது. குருபூஜையையொட்டி சுவாமிகளுக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார மகா நிவேதன ஆராதனையும், அடுத்து மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. கரோனா விதிமுறைகள் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Image Caption

திருவாரூரில் குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள் மடத்தில் சிவலிங்கத்துக்கு நடைபெற்ற பூஜை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com