ஒரே நாளில் 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு

திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) ஒரே நாளில் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது

திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) ஒரே நாளில் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்து பேசியது:

கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் 633 இடங்களில் 63,200 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில், இதுநாள்வரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், கட்டாயம் செலுத்திக் கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஹேமசந்த்காந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் செல்வகுமாா் உள்ளிட்ட அரசு அனைத்துத்துறை அலுவலா்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com