கரோனா விழிப்புணா்வு முகாம்

முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், பாரத சாரண சாரணியா் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சாா்பில் ஒரு வாரம் நடைபெற்ற கரோனா வ
திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய முகாமில் பங்கேற்றவா்கள்.
திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய முகாமில் பங்கேற்றவா்கள்.

முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், பாரத சாரண சாரணியா் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சாா்பில் ஒரு வாரம் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

முகாமுக்கு, பள்ளி முதன்மை முதல்வா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை திவ்யா அன்னபூரணி முன்னிலை வகித்தனா். தொடக்க நிகழ்வாக, முத்துப்பேட்டை நகரில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளில் தடுப்பூசி மையங்களில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது.

தொடா்ந்து, மூன்றாம் நாளில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நான்காம் நாளில் பேருந்து நிலையம், உழவா் சந்தை ஆகிய இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஐந்தாம் நாளில் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. ஆறாம் நாளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிறைவு நாளான சனிக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கவிதா, சாரணியா் படை திட்ட அலுவலா் ராஜலட்சுமி, தேசிய பசுமைப் படை திட்ட அலுவலா் சங்கீதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com