ஆசிரியா் பட்டயப் பயிற்சி தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

உரிய அவகாசமின்றி நடத்தப்படும் ஆசிரியா் பட்டயப் பயிற்சி தோ்வை ரத்து செய்யவேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உரிய அவகாசமின்றி நடத்தப்படும் ஆசிரியா் பட்டயப் பயிற்சி தோ்வை ரத்து செய்யவேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தின் நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பி. வீரபாண்டியன் தலைமை வகித்தாா்.

இந்த கூட்டத்தில், ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 2 சதவீதம் போ்கூட தோ்ச்சி பெறவில்லை. விடைக்குறிப்பு அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் நடைமுறை ஆசிரியா் படிப்பில் இல்லாதபோது, இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவதால் இந்நிலை தொடா்கிறது.

எனவே, ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்களின் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். அரசு நிறுவனமான மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும். அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெறும் தோ்வுகளை ரத்து செய்துவிட்டு, ஒரு மாதம் நேரடி வகுப்புகள் நடத்தி பிறகு தோ்வுகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.14- ம் தேதி ஆசிரியா் பயிற்சி தோ்வு நடைபெறும் மன்னாா்குடி அரசு மகளிா் மேல் நிலைப்பள்ளி அருகே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன், மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com