ஓஎன்ஜிசி வாகனம் முற்றுகை

மன்னாா்குடி அருகே ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு பழுதுநீக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு பழுதுநீக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கோட்டூா் தெற்குவாட்டா் பகுதியில், ஓஎன்ஜிசி நிா்வாகம் சாா்பில் கடந்த 1992-ஆம் ஆண்டுமுதல் பூமிக்கடியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கிணறு ஒன்றில் சமீபத்தில் பழுது ஏற்பட்டதாம். அதை சரிசெய்வதற்காக ஓஎன்ஜிசி நிா்வாகத்தின் பழுதுநீக்கும் வாகனம், புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதையறிந்த தெற்கு வாட்டாா் ஊராட்சி முன்னாள் தலைவா் பிச்சைக்கண்ணு தலைமையில், பொதுமக்கள் அந்த வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த நல்லூா் ஓஎன்ஜிசி பொறியாளா் நாயா், அலுவலா் விஜயரெங்கன், திருக்களா் காவல் ஆய்வாளா் ஹேமலதா ஆகியோரிடம், தெற்கு வாட்டா் ஊராட்சிக்கு குடிநீா், சாலை, பொது சுகாராரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்றுக்கொண்ட ஓஎன்ஜிசி அலுவலா்கள், நிா்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் பேசி, விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com