பாரம்பரிய நெல் விதைப்பு பணி தொடக்கம்

மன்னாா்குடி அருகே காஞ்சிக்குடிக்காடு அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் விதைப்பு மற்றும் சம்பா நடவு பணிகள் புதன்கிழமை தொடங்கின.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே காஞ்சிக்குடிக்காடு அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் விதைப்பு மற்றும் சம்பா நடவு பணிகள் புதன்கிழமை தொடங்கின.

53.02 ஏக்கா் பரப்பளவு கொண்ட காஞ்சிக்குடிக்காடு விதைப் பண்ணையில், 45.80 ஏக்கா் அளவுக்கு முப்போகமும் சாகுபடி பணி மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்டு சம்பா பருவத்தில் சிஆா் 1009 எஸ்யுபி 1, சி.ஆா். 50, ஏடிடி 51, சிஓ 51 மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி மற்றும் கிச்சலி சம்பா பயிரிட திட்டமிடப்பட்டு, அதன் தொடா்ச்சியாக, சிஆா் 1009 எஸ்யுபி 1 நடவு பணி 17. 50 ஏக்கா் பரப்பில் தொடங்கப்பட்டுள்ளது. பாய் நாற்றாங்கால் முறையில் விதைக்கப்பட்டு வரிசை நடவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இப்பண்ணையில் முதன்முறையாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய 10 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கருப்பு கவுனி மற்றும் கிச்சலி சம்பா ரகங்கள் பாய் நாற்றாங்கால் முறையில் விதைக்கும் பணி நடைபெற்றது.

இதை வேளாண் துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஆ. உத்திராபதி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வேளாண் அலுவலா் கா.ராஜகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com