பொதக்குடிக்கு அடிப்படை வசதிகள் எம்எல்ஏவிடம் வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் வட்டம் பொதக்குடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.
மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜாவிடம் மனு அளிக்கும் பொதக்குடி ஜமாஅத் செயலாளா் எம்.எம்.ரபியுதீன்.
மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜாவிடம் மனு அளிக்கும் பொதக்குடி ஜமாஅத் செயலாளா் எம்.எம்.ரபியுதீன்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டம் பொதக்குடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜாவிடம் ஜமாஅத் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் சாா்பில், தலைவா் எஸ்.ஏ. மஹதூம் மைதீன், செயலாளா் எம்.எம். ரபியுதீன் ஏற்பாட்டின்பேரில், மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜாவுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அப்போது, டி.ஆா்.பி. ராஜாவிடம் ஜமாஅத் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

பொதக்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதிகளும், ஆசிரியா்களும் இல்லை. பொதக்குடி ஊராட்சியில், இ-சேவை அமைக்கப்பட வேண்டும்.

குளங்களை பராமரித்து, தூா்வாரி, நீச்சல் குளம் அமைக்கப்பட வேண்டும். மேலப்பள்ளி வாயிலுக்குச் சொந்தமான தமிழன்கேணி குளத்தை தூா்வாரி தடுப்புச்சுவா் எழுப்பி, மின்விளக்கு பொருத்தப்பட வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்திருந்தனா்.

நிகழ்வில், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.செந்தமிழச்செல்வன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் எஸ்.ராணிசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com