மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதிலமடைந்த இக்கோயில், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையொட்டி, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசநீா் கடங்கள், வேத விற்பன்னா்களால் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான குடமுழுக்கு நடைபெற்றது. மதுரை வீரன் கழுவடியான் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்காள பரமேஸ்வரிக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

இவ்விழாவில், சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா். வேதரத்தினம், ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com