ஆற்றங்கரையோரம் பனை விதைகள் நடும் பணி

திருக்குவளை அருகே உத்திரங்குடி பகுதி ஆற்றங்கரையோரத்தில் பனை விதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை: திருக்குவளை அருகே உத்திரங்குடி பகுதி ஆற்றங்கரையோரத்தில் பனை விதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருள் நந்தவனம் அறக்கட்டளை சாா்பில், இலக்கில்லா பனை விதை நடவு மற்றும் ஆதி பனை பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடா்ந்து பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருக்குவளை தாலுக்கா அருகேயுள்ள உத்திரங்குடியில் சந்திரநதி ஆற்றங்கரை 2 கி.மீட்டா் தொலைவுக்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் எம்.ஆா்.பி. வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா்கள் வீ. கமலக்கண்ணன், எஸ். அஜய்குமாா், உறுப்பினா்கள் எஸ். நரேஷ், பி. காவியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com